Home இலங்கை வாள் வெட்டு சந்தேகநபர் கைது – கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்பு

வாள் வெட்டு சந்தேகநபர் கைது – கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்பு

by admin

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நபரொருவரை  தெல்லிப்பளைக் காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.  யாழ்ப்பாணம் – அளவெட்டி, நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரே  நேற்று  இரவு கைது செய்யப்பட்டு்ள்ளார். 

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், கோப்பாய் காவல்துறைப் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் என காவல்துறையினா் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும்  சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட இலக்க தகடற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை  காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More