இலங்கை பிரதான செய்திகள்

பாதுகாப்புஉத்தியோகத்தருக்கு கொரோனா -பருத்தித்துறை தேசிய சேமிப்பு வங்கியை மூடுமாறு கோாிக்கை

தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்ட நிலையில் அந்தக் கிளையில் பணியாற்றும் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதனால் வங்கியின் பருத்தித்துறை கிளை மாற்று நடவடிக்கை வரை மூடுமாறு சுகாதார மருத்துவ அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதாக இன்று முற்பகல் அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையில் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களையும் 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.