Home இலங்கை கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து – சமிக்ஞை விளக்குகள் சேதம்!

கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து – சமிக்ஞை விளக்குகள் சேதம்!

by admin

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமும் கோப்பாயில் இருந்து கைதடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில்  சமிக்ஞை விளக்கு சேதமடைந்து தொலைத்தொடர்பு கம்பம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று இரவு  கோப்பாய் சந்திப் பகுதியில் இடம்பெற்றது.

சமிக்ஞை இலக்கங்கங்கள்  ஒளிர்ந்து கடைசி மூன்று செக்கன்கள் முடிவடையும் நிலையில் மற்றைய பகுதிக்கு செல்வதற்காக வேகமாக பயணித்த இரண்டு கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் வாகனத்தின் சாரதி ஒருவர் காயமடைந்தார். குறித்த சம்பவத்தில் சமிக்ஞை விளக்கு பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரும் மயிரிழையில் உயிர் தப்பியதுடன் இவற்றின் காரணமாக போக்குவரத்தும் சிறிது நேரம் தடைபட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More