உலகம் பிரதான செய்திகள்

கெயிட்டி நிலநடுக்கத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு

கெயிட்டி , நிலநடுக்கம்

கெயிட்டி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்வடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. பல உயரமான கட்டடங்கள் இடிந்து தரை மட்டமானகியுள்ளதனால் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நிலநடுக்கத்தால் கட்டிய இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கெயிட்டியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இதுவரை 304 பேர் பலி!

August 15, 2021 7:07 am

கெயிட்டி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 304 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

கரீபியன் தீவுகளில் ஒன்றான கெயிட்டியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. கெயிட்டியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கெயிட்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 304 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. கெயிட்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அந்நாட்டை மிகவும் பாதித்துள்ள நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி காயமடைந்தோர் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.