இலங்கை பிரதான செய்திகள்

காவல்துறையினாின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவா் பலி

திஸ்ஸமஹாராம – சூரியவெவ பிரதேசத்தில் காவல்துறையினர் மேற்கொண்டதுப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு கொள்ளையர்கள் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இன்று (17) பிற்பகல் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவா் பெண் ஒருவரின் க​ழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இது தொடா்பில் கிடைக்கப்பெற்றமுறைப்பாட்டுக்கமைய சூரியவெவ காவல் நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று ஜீப் வாகனத்தில் குறித்த கொள்ளையர்களை துரத்திச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கொள்ளையர்கள் காவல்துறையினாின் வாகனத்தினை நோக்க துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள தாகவும் பதிலுக்கு காவல்துறையினா் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த கொள்ளையர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, காவல்துறையினாின் ஜீப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதியதில் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனா்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.