இலங்கை பிரதான செய்திகள்

“கொரோனாவின் முடிவில் எங்களைச் சுற்றியுள்ள பலர் சொல்லாமலே போயிருப்பார்கள்.”

இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, வெளவால்களுக்கும் ஆந்தைகளுக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கொ​ழும்பில் இடம்பெறும் காட்சியொன்றை புகைப்படமெடுத்து மிகவும் உருக்கமான பதிவொன்று பேஸ்புக்கில் இடப்பட்டுள்ளது.

கொழும்பு வோர்ட் பிளேசில் பிரதே அறை அமைந்துள்ள பகுதி மாலை ஆறு மணி முதல் அதிகாலை ஆறு மணிவரை பிரேத ஊர்வலம் நடக்கும் பகுதியாக காணப்படுகின்றது என, அந்தப் பகுதியில் உள்ள அலுவலகமொன்றில் பணிபுரியும் பெண்ணொருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படம் நேற்று மாலை நான்கு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது எடுத்தது- இந்தக் காட்சி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையின் முன்பாக காணப்பட்டது. மலிவான விலையில் கிடைக்கும் பிரேதப் பெட்டிகளை ஓட்டோக்களில் கொண்டுவந்தனர்.

இவ்வாறான பிரேதப் பெட்டிகளை அரசாங்கம் வழங்குவதில்லை, உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தால் இருபது முதல் முப்பதினாயிரம் ரூபாய்க்கு பிரேதப்பெட்டிகளை உங்களுக்காக கொள்வனவு செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லை.

அவர்களை இப்படித்தான் அவர்கள் அனுப்புவார்கள். எனது அலுவலகம் அந்தப் பகுதியிலேயே உள்ளது,நான் சிலவேளைகளில் எனது அலுவலகத்தின் மேல் மாடியில் நின்றவாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையைப் பார்ப்பேன். மருத்துவமனையில் அதிக செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியாக பிரேத அறையே தற்போது காணப்படுகின்றது. அப்பாவி மக்கள் நாளாந்தம் பிரேத அறை முன்னால் கதறுகின்றனர்,சிலர் நிலத்தில் அமர்ந்து அருகிலுள்ள மரங்களைக் கட்டியணைத்து அழுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை – உயிரிழந்தவர்களை தகனத்திற்காக கொண்டு செல்வதற்குத் தயாரான நிலையில் அம்புலன்ஸ்கள் மாத்திரம் மருத்துவமனை வீதியில் காணப்படுகின்றன.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக பகலில் எடுத்துச் செல்வதில்லை,இரவிலேயே எடுத்துச்செல்கின்றனர்.

ஆகவே மாலை ஆறு மணி முதல் அதிகாலை ஆறு மணி வரை வோர்ட் பிளேசில் பிரேத அறை அமைந்துள்ள பகுதி பிரதே ஊர்வலம் நடக்கும் பகுதியாக காணப்படுகின்றது. பிரேதப் பெட்டிகள் விற்கும் கடைகளில் பிரேதப் பெட்டிகள் இல்லை என்பதை என்னால் இன்று அறிய முடிந்தது.

இதன் அர்த்தம் என்னவென்றால் எதிர்காலத்தில் மிகவும் மலிவான பிரேதப் பெட்டியில் இறுதி ஊர்வலத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் கூட உங்களிற்கு இல்லாமல் போகலாம்.

நீங்கள் என்னை பொலித்தீன் பைகளில் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலையேற்படலாம்.
மயானங்களில் உடல்களை ஒன்றாக சேர்த்து எரியூட்ட வேண்டிய நிலையேற்படலாம்.

கோடி ரூபாவுக்கு பிரேதப் பெட்டியை கொள்வனவு செய்வதற்கான வசதியிருந்தால் கூட எங்களால் எங்கள் நெருங்கிய நண்பருக்கு கௌவரமான பிரியாவிடையை வழங்க முடியாது.

இன்று நீங்கள் உயிருடன் இருக்கக்கூடும் நாளை நீங்கள் அவருடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இணையக்கூடும்.

அவ்வேளையில் கூட இந்த மோசமான வீதி எங்கள் இறுதி ஊர்வலத்திற்கு அவசியமான சோகமான சூழலை உருவாக்கக் கூடும்.

கொரோனாவுடனான இந்த மோதல் முடிவிற்கு வரும் நேரம் எங்களைச் சுற்றியுள்ள பலர் சொல்லாமல் போயிருப்பார்கள்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.