
இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை பிாித்தானியா தளர்த்தியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பிாித்தானியா செல்லும் விமான சேவையை பிரிட்டிஷ் எயா்வேஸ் விமான நிறுவனம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியதால் கடந்த மே மாதத்தில் பிாித்தானியா இந்தியாவுக்குப் பயணம் கட்டுப்பாடு விதித்திருந்தது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டு தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைந்து வருவதரனயடுத்து இவ்வாறு பிாித்தானியா பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
எனினும் இந்தியாவில் இருந்து திரும்பும் தடுப்பூசி முழுமையாகப் போட்ட பிாித்தானிய குடிமக்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment