உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்திற்கு விட்டு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் வழங்கிய வீராங்கனை

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த 25 வயது வீராங்கனையான மரியா ஆந்த்ரேஜிக் (MariaAndrejczyk) ஒலிம்பிக் போட்டி முடிந்து இரண்டு வாரங்களுக்குள் தனது வாழ்நாள் கனவாக கைப்பற்றிய பதக்கத்தை ஏலம் விட்டுள்ளாா்

போலந்து நாட்டை சேர்ந்த எட்டு மாத குழந்தையின் சிக்கலான அவசர இதய அறுவை சிகிச்சைக்கு நிதி இல்லாமல் தவித்த தம்பதி முகப்புத்தகம் மூலம் விடுத்திருந்த வேண்டுகோளை பார்த்த அவர் இணையத்தளம் மூலம் தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலத்திற்கு விட்டு அதன் மூலம் கிடைத்த  125,000 டொலா் பணத்தினை அறுவை சிகிச்சை செய்யவுள்ள குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதேவேளை பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய தனியார் நிறுவனம் மரியாவின் பரந்த மனதை பாராட்டி இருப்பதுடன் அந்தப் பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.