Home உலகம் காபூலிலிருந்து பாரிஸ் வந்தோரில் ஐவர் சந்தேகத்தில் கண்காணிப்பு!

காபூலிலிருந்து பாரிஸ் வந்தோரில் ஐவர் சந்தேகத்தில் கண்காணிப்பு!

by admin


ஒருவர் தலிபான் இயக்க ஆயுததாரி திருப்பி அனுப்ப அரசுக்கு அழுத்தம்!
காபூலில் இருந்து அபுதாபி வழியாகப் பாரிஸுக்கு மீட்டுவரப்பட்ட ஆப்கானிஸ் தான் பிரஜை ஒருவரும் அவரது உறவினர்கள் நால்வரும் கண்காணிப்பின் கீழ்பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்றுதகவல் வெளியாகியுள்ளது.


தலிபான்களுடன் நேரடியான தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே
அந்த ஆப்கான் பிரஜையும் அவரது சகோதரர் உட்பட குடும்பத்தினர் நான்கு பேரும் பாரிஸ் Noisy-le-Grand பகுதியில் உள்ளஹொட்டேல் ஒன்றில் மருத்துவத் தனி மைப்படுத்தலின் கீழ் வைத்துத் தீவிர மாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்ற னர் என்ற தகவலை உள்துறை அமைச்சுவட்டாரங்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளன.


1990 ஆம் ஆண்டு பிறந்த பிரஸ்தாப நபர் காபூல் நகரைத் தலிபான்கள் கைப்பற்றுவதற்குச் சில தினங்களுக்கு முன் அங்கு வீதிகளில் துப்பாக்கியுடன் நடமாடினார்என்பதும், அங்குள்ள பிரெஞ்சுத் தூதரகத்தின் அருகே அமைந்துள்ள சோதனைச்சாவடி ஒன்றின் பொறுப்பாளர் அவர் என்பதும் உள்நாட்டுக் கண்காணிப்புக் கான இயக்குநர் ஜெனரல் பிரிவின் (Directorate General of Internal Surveillance- DGSI) விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்
ளது.


அவரும் அவரது குடும்பத்தினரும் தற்சமயம் தங்கியுள்ள Noisy-le-Grand பகுதியில் இருந்து வெளியே செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தான நபர்கள் இவ்வாறு நாட்டுக்குள் வர நேர்ந்தமைக்கு காபூலில் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தூதரக அதிகாரிகளினது அல்லது புலனாய்வு சேவைகளினது விழிப்பின்மை காரணமா என்றகேள்விகள் எழுந்துள்ளன. ஐந்து பேரையும் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்புமாறு வலது மற்றும் தீவிர வலதுசாரிஅரசியல் பிரமுகர்கள் குரல் எழுப்பி உள்ளனர்.


“அவர்கள் ஐவரும் இந்த மண்ணுக்குத் தேவையில்லாதவர்கள். தாமதிக்காமல் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும்” – என்று இல் து பிரான்ஸ் பிராந்தியத்தலைவி வலேரி பெக்ரஸ் ருவீற்றர் பதிவிட்டிருக்கிறார்.


இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு ருவீற்றர் பதிவு ஒன்றை வெளியிட் டிருக்கும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட்டாமனா (Gérald Darmanin), “பிரான்ஸ் மனிதாபிமானத்துடன் விழிப்புணர்வும்
கொண்ட தேசம்” எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமான எல்லா நடவடிக்கைகளையும் அரசுஎடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


?இரண்டாயிரம் பேர் வருகை

இதுவரை ஆப்கான் வெளியேறிகள் சுமார் இரண்டாயிரம் பேர் விமானங்கள் மூலம் பாரிஸ் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்ற தகவலை வெளிநாட் டமைச்சு வெளியிட்டுள்ளது. காபூலில்இருந்து முதலில் அபுதாபியில் உள்ள இராணுவத் தளம் ஒன்றுக்கே அனைவரும் கொண்டுவரப்படுகின்றனர். அங்குவைத்து அவர்களது பொதிகள், ஆவணங்கள், அடையாளங்கள் தீவிரமாகப் பரிசோதிக்கப்படுகின்றன. பிரான்ஸில் நுழைவதற்கான நிர்வாகப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. கடைசியாகக் கொரோனாவைரஸ் பரிசோதனையும் நடத்தப்படுகிறது. பாரிஸில் வந்து இறங்கியதும் பத்துநாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படுகின்றனர். இத்தகவல்களை வெளிநாட்டு அமைச்சு
தெரிவித்துள்ளது. (படம் :BFM தொலைக்காட்சி)

குமாரதாஸன். பாரிஸ்.
24-08-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More