பிரதான செய்திகள் விளையாட்டு

பாராலிம்பிக்ஸ் விளையாட்டு இன்று ஆரம்பம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு இன்று ஆரம்பமாகின்றது. எதிா்வரும் செப்ரம்பா் 5-ம் திகதி வரை நடைபெறும் இந்தவிளையாட்டில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்

இன்று நடைபெறும் போட்டியை ஜப்பான் பேரரசர் நருஹிதோ முறைப்படி ஆரம்பித்து வைக்க உள்ளார்.  இந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வில்வித்தை, தடகளம், பட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 போ் கால்பந்து, ஜூடோ, பாராகனோ, பளுதூக்குதல், படகு போட்டி, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வொலிபோல், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சியா்கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

2020-ம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்த போதும் கொரோனா பாதிப்பு காரணமாக கோடைகால ஒலிம்பிக்போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.