
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுற்றது. ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று இன்றைய தினம் மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவம் நிறைவுற்றது.
நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இம்முறை மகோற்சவ திருவிழாக்கள் உள்வீதியில் பக்தர்களின் பங்கேற்பு இன்றி , சிவாச்சாரியார்களுடன் நடைபெற்றது.
அதனால் இம்முறை ஆலய சித்திர தேர் இழுக்காது உள்வீதியில் சிறிய தேரில் வேல் பெருமான் வள்ளி தெய்வானையுடன் ஆரோகணித்து உள்வீதி யுலா வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






Spread the love
Add Comment