இலங்கை பிரதான செய்திகள்

வடக்கில் கடந்த 6 நாள்களில் 75 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு

வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 6 நாள்களில் 75 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27 பேரும் கடந்த 6 நாள்களில் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை (செப். 6) 11 பேர் கொவிட்- 19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பபாணம் மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் முல்லைத்தீவில் 2 பேரும் கிளிநொச்சியில் ஒருவரும் என 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 488 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்  

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.