இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

உரிய நீதிக்குப் பதிலாக OMP ஐ பாதிக்கப்பட்டவர்களிடம் திணித்தல்!

Ms.Michelle Bachelet Jeria,
UN High Commissioner for Human Rights,
OHCHR,
Geneva.


அம்மணி!
உரிய நீதிக்குப் பதிலாக ஓ.எம்.பி ஐ பாதிக்கப்பட்டவர்களிடம் திணித்தல்
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நாம் பின்வரும்
விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு;வர விரும்புகின்றோம்.
2009 மே இல் யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசும் அரச படைகளும் ஊடகங்கள்
வாயிலாகவும், ஒலிபெருக்கி மூலமாகவும், விடுதலைப்புலிகளுடன் தொடர்பைப்
பேணியவர்களையும், உறுப்பினர்களாக இருந்தவர்களையும், சரணடையும்படி அறிவித்தனர்
அவர்களை தாம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதாக திரும்பத் திரும்ப உறுதிமொழி
வழங்கினார்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பிய நாம் எங்கள் உறவுகளை எமது
கைகளால் ஒப்படைத்தோம். சிலர் எம் கண் முன்னேயே சரணடைந்தனர். இன்னும் சிலர்
குடும்பமாகவே மனைவி குழந்தைகளுடன் சரணடைந்தனர். இப்படி சரணடைந்த குடும்பங்களில்
30 இற்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள், சிறுவர்கள் அடங்குவர். இவர்களுக்கு என்ன நடந்தது?
இவர்கள் செய்த குற்றம் தான் என்ன? இவர்களை மீட்க சர்வதேசம் எடுத்த நடவடிக்கை
என்ன? எங்கள் உறவுகள் சரணடைந்த பின் எம்மை நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி
வைத்தனர். நாம் நலன்புரி நிலையங்களில் இருந்தவாறே பல வழிகளிலும் எமது உறவுகளைத்
தேடினோம். நலன்புரி நிலையங்களிலிருந்தும், சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த
வைத்தியசாலைகளிலிருந்தும் விசாரணைக்கெனக் கூட்டிச் ;செல்லப்பட்டவர்கள்கூட காணாமல்
ஆக்கப்பட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுக்குள், அரச புலனாய்வினராலும் வெள்ளை
வானாலும். துணை ஆயுதக் குழுக்களாலும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் தேடி இராணுவ முகாம்கள். புனர்வாழ்வு நிலையங்கள்,
சிறைச்சாலைகள் என்று அலைந்து திரிந்ததில் எமது ஆரோக்கியத்தை இழந்ததுடன்
பொருளாதாரத்தையும் இழந்துள்ளோம். எமது மனநிலையைப் பயன்படுத்தி புலனாய்வுப்பிரிவு
என தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் எம் உறவுகளை மீட்டுத்தருவதாகக் கூறி அப்பாவித்
தாய்மாரிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளனர்.
எனவே இனியும் தேடியலைவதில் பயன் இல்லை எனக்கருதி 2017 பெப்ரவரி 20ம்
தேதியிலிருந்து வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களில் தனித்தனியாக தேடியலைந்த
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒருங்கிணைந்து கிளிநொச்சி கந்தசாமி
கோயில் முன்றலில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினோம்.. அப் போராட்டம்
தொடங்கிய அன்றே ஐ.நா விற்கு எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தோம்.
கிளிநொச்சியில் தொடங்கிய போராட்டம் படிப்படியாக வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,
திருகோணமலை, அம்பாறை என மற்றைய மாவட்டங்களிலும் விரிவடைந்தது. எமது
போராட்டத்திற்கு கரிசனை காட்டாத இலங்கை அரசு எமது 100வது நாளின் 5000 இற்கு
மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட போராட்டத்தை அடுத்து 12.06.2019 அன்று அப்போதைய
ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது. அந்த முதற் சந்திப்பிலே நாம் எமது
கோரிக்கைகளை விரிவாக கூறி எழுத்து வடிவிலும் கையளித்தோம். அச் சந்திப்பில் வைத்தே
எமது கேபரிக்கைகள் நியாயமானவை எனக் கூறி கூடிய விரைவில் அவற்றை நிறைவேற்றி
வைப்பதாகவும் ஜனாதிபதி; உறுதியளித்தார். எனினும் அவர் கூறியபடி செய்யாது எமது
ஞாபகமூட்டல்களை பொருட்படுத்தாதிருந்தார். நாம் பலத்த முயற்சியின் பின் ஜனாதிபதி
அலுவலகத்தி;ல் 3வது தடவையாகச் சந்தித்து அவரது வாக்குறுதி பற்றி கேட்டோம்.. அதில்
அவர் தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கினார். அவருடனான தர்க்கத்தின் போது நாம்
‘உங்களிடமிருந்து நீதி கிடைக்காது. நாம் சர்வதேசத்திடம் நீதி கேட்டுப் பெறுவோம்’ எனத்
தெரிவித்து வெளியேறினோம். அதற்கு அவர் ‘தாராளமாகப் போங்கள். எமக்கு சர்வதேசத்திற்குப் பதில் சொல்லத் தெரியும்’ என்றார்.
ஆணையாளர் அவர்களே!
இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதற்கு பின்வரும் சம்பவங்கள்
உதாரணங்களாகும்

 1. மிருசுவில் எட்டு தமிழர்கள் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு
  மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க என்பவருக்கு தற்போதைய ஜனாதிபதி
  ஆட்சிக்கு வந்ததும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல அவர் செய்த
  படுகொலையை ஊக்குவித்தாற்போல் உடனடியான பதவியுயர்வும் வழங்கப்பட்டது.
 2. கொழும்பில் கடத்தி படுகொலை செய்யப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் படுகொலை
  செய்யப்பட்ட வழக்கில் வலுவான ஆதாரங்கள், சாட்சிகள் இருந்தும் கூட கொலைக்கு
  துணை போன வசந்த கரன்னகொட என்ற இராணுவ உயரதிகாரி; உட்பட்ட
  குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக சட்ட மா அதிபரின் ஆணைக்கு அமைய வழக்கை
  தொடர்ந்து நடத்த முடியாது என்று வழக்கு பாதியிலேயே மீளப் பெறப்பட்டு
  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.
 1. வேறோர் வழக்கான 5 மாணவர்கள் 2006 ம் ஆண்டு திருகோணமலை கடற்கரையில்
  வைத்துப் படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கும் போதிய சாட்சிகள்
  இல்லை எனத்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட ஒரு
  மாணவனின் தந்தையும் சம்பவத்தை நேரில் பார்த்தவருமான டொக்ரர் மனோகரன் அரச
  விசாரணையில் சாட்சி அளிக்க முன்வந்திருந்தார்.
 2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தொடரப்பட்ட ஆட்கொணர்வு
  மனு விசாரணையின் போது தாம் யாரிடம் ஒப்படைத்தோம் என்ற விபரத்தை
  கூறக்கூடியதாக இருந்தும் கூட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதற்குக்
  கூறப்பட்ட காரணம் அவர்களால் தமது உறவுகளை இராணுவம் ஏற்றிச் சென்ற
  வாகனத்தின் இலக்கத்தைக் கூறமுடியவில்லை என்பதாகும். இறுதி யுத்தத்தின் போது
  உயிர் தப்புவதற்காக ஓடியவர்களால் எப்படி அந்த பஸ் இலக்கத்தை நினைவில்
  வைத்திருக்க முடியும்? எழுதி வைப்பதற்கு அந்த நேரத்தில் பேனா, பேப்பர்
  வைத்திருந்தவர் யார்?
  உண்மையாகவே எமது உறவுகளைத் தேடுவதாக இருந்தால் எமது உறவுகள் சரணடைந்த,
  கையளிக்கப்பட்ட இடங்களான இராணுவகாவலரண்களில் (வட்டுவாகல், முள்ளிவாய்க்கால்,
  புதுமாத்தளன், ஓமந்தை) அந்நேரத்தில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகளை
  விசாரிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களை
  விசாரிப்பதன் மூலம் எதைச் சாதிக்க முடியும்? காலத்தைக்கடத்தவும், எமது துயரை கிளறி
  வேதனைப்படுத்தவும் மட்டுமே முடியும்.
  கடந்த 2021.08.30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று ஐ.நா வின்
  இலங்கைக்கான வதிவிடப்பிரதிநதி அவர்களால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
  அதிலே ழுஆP அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை இலங்கை அரசாங்கத்தினால்
  முன்னெடுக்கப்பட்ட முக்கியமான ஒரு வழிமுறை என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை
  பார்த்து கவலையடைந்தோம். எனினும் முக்கியமான ஒரு கருத்தும் அதில் கூறப்பட்டுள்ளது.
  அதாவது ‘காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தின் வெற்றிக்குப்
  பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆகியோரின் நம்பிக்கையைக்
  கட்டியெழுப்பி தக்க வைத்துக் கொள்வது அத்தியாவசியமானதாகும்’. என்பதே அது. ஆனால்
  இலங்கையில் நடந்தது என்ன?
  இந்த ‘காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம்’ தாபிப்பதற்கான பொது மக்களின்
  கருத்தை அறியும் ‘கலந்தாலோசனைச் செயலணியின் மாவட்ட தலைவராக, செயலாளராக,
  உறுப்பினராக என பல்வேறுபட்ட மட்டங்களிலும் பாதிக்கப்பட்ட நாங்கள் அர்ப்பணிப்புடன்
  செயற்பட்டு; இறுதித் தீர்மானம் அரசுக்குக் கையளிக்கும் வரை எமது பங்களிப்பை
  வழங்கியிருக்கின்றோம்.. அந்த வகையில் ழுஆP சட்டம் கொண்டு வரப்பட்ட அவசரத்தையும்
  அதில் பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து உள்வாங்கப்படாததையும் நாம் நன்கு அறிவோம்.
  அதனால் நாம் அதில் உள்ள குறைபாடுகளை, அச் சட்டத்தை வரைவதில் பொறுப்பாக இருந்த
  சட்டவாளர் திருமதி பிரசாந்தி அவர்களும் நல்லிணக்கச் செயலணியின்(ளுஊசுஆ) தலைவர்
  திரு.மனோ ரிற்ற வெல அவர்களும் அடங்கிய குழுவினருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி
  அவர்களிடம் ழுஆP அலுவலகம் தாபிப்பதற்கான சட்ட மூலத்தில் உள்ள குறைபாடுகளைப்
  பட்டியலிட்டுச் சுட்டிக்காட்டி, அவற்றை மறுபரிசீலனை செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புமாறு எழுத்துமூலமான வேணடுகோளையும் வைத்திருந்தோம்.

 3. அப்போதைய ஜனாதிபதி, நாட்டின் தூதரக அதிகாரிகள், ஊடகங்கள் ஆகியோருக்கும் எமது
  நிலைப்பாட்டைக் கூறியிருந்தோம். அவை எவற்றையும் கருத்திலெடுக்காது, வெளிப்படைத்
  தன்மை எதுவும் இன்றி மிகவும் இரகசியமான முறையில் எல்லா நடவடிக்கைகளும்
  மேற்கொள்ளப்பட்டன. OMP அலுவலகங்கள் எமது எதிர்ப்புப் போராட்டங்களை
  கருத்திலெடுக்காது மிக மிக இரகசியமாகத் திறக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திற்கான அலுவலகம்
  கூட அதிகாலை 5 மணிக்கு முன்னரே திறக்கப்பட்டது. கடந்த 2021.08.12 அன்று கொவிட் 19
  பயணத்தடை அமுலில் இருந்த வேளையில் எவரும் அறியாமல் கிளிநொச்சி மாவட்டத்திற்கான
  OMP அலுவலகம் மிக இரகசியமாகத் திறக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் கூட 3
  நாட்களின் பின்னரே இது பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. பாதிக்கப்பட்ட எமக்கு
  உதவுவதற்கான அலுவலகமாக இருந்தால் எம்முடன் வெளிப்படைத்தன்மையுடன் இருந்து ஐ.நா
  வதிவிடப்பிரதிநிதி கூறியது போல் எமது நம்பிக்கையை கட்டியெழுப்பியிருந்திருக்க வேண்டும்.
  இது முற்று முழுதாக ஐ.நா வின் அழுத்தத்தைக் குறைப்பதற்காக அவசர கதியில்
  உருவாக்கப்பட்ட செயல் திறனற்ற ஒன்று என்பதே உண்மை. இதன் செயல் திறனற்ற
  தன்மையை நிரூபிப்பதற்காகவே 2019.05.17 அன்று ழுஆP அலுவலகத்தின் தலைவர் திரு.சாலிய
  பீரிஸ் அவர்களும், மற்றைய ஆணையாளர்களும் அடங்கிய குழுவுடன் கலந்துரையாடினோம்.
  அப்போது நாம் OMP ஐ நிராகரிப்பதற்கான காரணந்களைத் தெளிவுபடுத்தினோம். முடிவில்
  நாம் வலுவான சாட்சியங்களுள்ள ஐந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை
  கொடுப்பதென்றும் அவற்றில் ஒன்றுக்காவது 3 மாத காலத்துள் சரியான தீர்வு எட்டப்பட்டால்
  நாம் ழுஆP ஐ நம்புவதாகக் கூறியிருந்தோம். அதன்படி 2019.07.20 அன்று 5 விபரங்கள்
  கையளிக்கப்பட்டது.; அவற்றைப் பெற்றுக் கொண்டமைக்கான ஏற்புக் கடிதத்தைத் தவிர இரண்டு வருடங்கள் கடந்தும் எதுவித பதிலும் இல்லை. ழுஆP செயற்திறனற்ற ஒன்று என நிரூபிப்பதற்கு இது ஒன்றே போதும்.
  இதுவரை காலமும் இலங்கை அரசு பொறுப்புக்கூறலுக்கான கால நீடிப்பைப் பெற்று காலத்தை
  இழுத்தடித்தது. பின் ழுஆP ஐ காட்டி ஐ.நா வின் அழுத்தத்தை சிறிது காலம் குறைத்ததுடன்
  காலமும் இழுபட்டது. தற்போது வெளிப்படையாகவே காணாமல் ஆக்கப்பட்டமை யாரால்
  நிகழ்ந்தது என தேடுவதை விட்டு நட்ட ஈடு கொடுக்க முனைகிறார்கள். சுருங்கக் கூறுவதாயின்
  வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோர் விடயத்தையும் வலிந்து காணாமல் ஆக்க முயற்சி
  நடைபெறுவதை உணரமுடிகிறது. அதற்கு ஏதுவாக உறவுகளைத் தேடுவதற்கான எமது
  போராட்டத்தில் முனைப்புடன் செயற்படுபவர்களையும் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு
  கொண்டு செல்லும் வகையில் செயற்படுபவர்களையும் அரசின் புலனாய்வுப்பிரிவினர்
  அச்சுறுத்துகின்றனர். சிலரது குடும்ப அங்கத்தவர்களும் அச்சத்துக்குள்ளாக்கப்படுகின்றனர்.
  எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே நாம் 1660 நாட்களைக்
  கடந்தும் நுர்று;றுக்கு மேற்பட்டவர்கள் இறந்தும், தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில்
  ஈடுபட்டு வருகின்றோம். நாம் உயிருடனே கையளித்த,சரணடைந்த உறவுகளுக்கு என்ன
  நடந்தது என்பதை அறிய போராடும் எமக்கு உரிய தீர்வு வழங்காது எமது தாய்மாரின்
  வறுமையைப் பயன்படுத்தி நட்டஈட்டை வழங்கி, காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தை முடிவுக்குக் கொண்டுவர முயல்வது எவ்வளவு தவறு? இதனால் ஒருபோதும் மீள்நிகழாமையை ஏற்படுத்த முடியாது. இனங்களுக்கிடையான முரண்பாடு மேலும் தொடரும். சரியான நீதியின்றி, நட்டஈட்டை மட்டும் கொடுப்பதால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகள்,சகோதரர்கள் ஆகிய இளம் சந்ததியினரின் உளத்தாக்கங்கள் ஆற்றுப்படுத்தப்படமாட்டாது. அதனால் இவர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வது சமூகவிரோதிகளுக்கு சுலபமாகி எமது சமுதாயம் சீரழியும்.

 4. ஆணையாளர் அவர்களே!
  தங்களின் மேலான கவனத்திற்கு ழுஆP இன் கையாலாகாத்தனத்தை ஆதாரத்துடன்
  சமர்ப்பித்திருக்கிறோம். கடந்த வருட தங்கள் வாய் மொழி மூல அறிக்கையில் எங்களால்
  நிராகரிக்கப்பட்ட ழுஆP ஐ சிலாகித்துப் பேசியதைக் கேட்டு நாம் மிக மன வேதனை
  அடைந்தோம். எனவே இனியும் எங்கள் மீது ழுஆP வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதிலிருந்து
  எங்களை விடுவித்து, ழுஆP ஐ தவிர்த்து சர்வதேச விசாரணையுடன் கூடிய நீதிப் பொறிமுறை
  ஒன்றை பரிந்துரை செய்து நாம் இறப்பதற்கு முன் நீதியைப் பெற்றுத்தாருங்கள்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.