
மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18.09.2021 )இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனர்.
அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு மதுபோதையில் சென்ற கணவர், மனைவியை தாக்கியதனையடுத்து , மனைவி, கணவரை பொல்லால் தாக்கிய நிலையில் , கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தனது 8 வயதான மகளுடன் அதே வீட்டில் தங்கியிருந்த 27 வயதான மனைவி, அதிகாலை தனது மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தையை ஒப்படைத்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவத்தில் அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அவிசாவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Add Comment