பிரதான செய்திகள் விளையாட்டு

ஹைதராபாத்தை வென்ற டெல்லி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற்றம்

14 வது ஐபிஎல் சீசனின் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது

நாணய சுழற்சியை வென்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீா்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின்முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து 135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.