Home பிரதான செய்திகள் சென்னையை வென்ற டெல்லி

சென்னையை வென்ற டெல்லி

by admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இரவு நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடாின் 50ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கப்பிடல்ஸ் அணி வென்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 137 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி .19.4 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை எடுத்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் டெல்லி அணிக்கு இது 100ஆவது வெற்றியாகும்.

இதேவேளை இன்று நடைபெறும் 51ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் போட்டியிடவுள்ள நிலையில் இந்த போட்டிஇரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More