இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

சிறுபான்மையினர் மீது தாக்குதல்

காஹவத்தை, வட்டபொத்த தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் தாக்குதல்களை நடத்தியதுடன், சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த தாயொருவரும் மூன்று இளைஞர்களும் காஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தோட்டக் குடியிருப்பொன்றும், நான்கு முச்சக்கர வண்டிகளும் , இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்நறது.

தாக்குதல்களுக்குள்ளான இளைஞர்களில் ஒருவருக்குச் சொந்தமான சுயதொழிலில்
ஈடுபடும் இயந்திரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க நகையும் அபகரிக்கப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யடாகர கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கும்பலே, ​தோட்டத்துக்குள் புகுந்து இவ்வாறு தாக்குதலை நடத்தியுள்ள நிலையில் சம்பவம் இடம்பெற்ற தோட்டத்துக்குச் சென்றிருந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப- செயலாளர் ரூபன் பெருமாள் அச்சத்தில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளாா்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.