உலகம் பிரதான செய்திகள்

சிறந்த முதியவருக்கான விருதை பெற மறுத்த பிாித்தானிய ராணி

பிாித்தானியாவைச் சோ்ந்த பிரபல பத்திரிகை ஒன்று பொது வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் முதியவர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் ஆண்டின் சிறந்த முதியவர் என்னும் விருதை 95 வயதான ராணி 2-ம் எலிசபெத் வாங்க மறுத்துள்ளாா்.

இந்த ஆண்டின் சிறந்த முதியவர் விருதை ராணி 2-ம் எலிசபெத்துக்கு வழங்க அந்த பத்திரிகை நிறுவனம் முடிவு செய்த நிலையில் அதனை பெற மறுத்துள்ள ராணி இது தொடர்பாக அந்த பத்திரிகைக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில் ‘‘முதுமை என்பது நீங்கள் உணர்வதில்தான் உள்ளது. அதாவது முதுமை என்பது மனதில்தான் உடலில் அல்ல. நான் என்னை முதுமையாக உணரவில்லை. எனவே நான் இந்த விருதுக்கு தகுதியானவர் அல்ல. தகுதியான நபரை கண்டுபிடித்து அந்த விருதை வழங்குவீர்கள் என நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

மறைந்த இங்கிலாந்து இளவரசரும் ராணி 2-ம் எலிசபெத்தின் கணவருமான பிலிப் கடந்த 2011-ம் ஆண்டு தனது 90 வயதில் ஆண்டின் சிறந்த முதியவர் விருதை பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ராணி 2-ம் எலிசபெத்தின் வைத்தியா்கள் அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து, அவர் தனது வட அயர்லாந்திற்கான பயணத்தை ரத்து செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.