பிரதான செய்திகள் விளையாட்டு

T20 உலகக் கிண்ணம் -இலங்கை – பாகிஸ்தான் வெற்றி

நேற்றையதினம் சார்ஜாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண சூப்பர்-12 சுற்றில் இலங்கை அணி பங்களாதேஸ் அணியினை 5 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ்அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்தது. .

இதையடுத்து 172ஓட்டங்கள் எடுனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 5 விகெட்டுகளை இழந்து 172 ஓட்டங்ககள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

 அதேவேளை இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் டுபாயில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 152ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி எந்த விக்கெட்டுக்களையும் இழக்காது வெற்றி இலக்கை அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.