பிரதான செய்திகள் விளையாட்டு

அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய பாகிஸ்தான்

அபுதாபியில் நேற்று நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு போட்டியில் நமிபியா அணியை 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று பாகிஸ்தான் அணி. அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது .

இந்தப் போட்டியில் முதலி்ல் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிாயணிக்கப்பட்ட 20ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து 190 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நமிபியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களை மட்டுமு எடுத்து 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் குரூப்-2 பிரிவில் முதல் அணியாக அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. இந்தப் பிரிவில் அடுத்ததாக நியூஸிலாந்தா ஆப்கானிஸ்தானா தகுதி பெறும் என்பது இன்று நடைபெறவுள்ள இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் நிாணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.