இலங்கை பிரதான செய்திகள்

சீனாவின், சேதன பசளைக் கப்பல் இலங்கையின் மேற்கு நோக்கிப் பயணம்!

சீன சேதனப் பசளையை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) கப்பல், இலங்கையின் மேற்கு கடற்பரப்பை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கடற்படையின் இணையத்தளம் உறுதி செய்துள்ளது.

குறித்த சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதாக இரு சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டமையால் இலங்கை அரசு, உரத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்திருந்தது.

இதேவேளை, தீங்கு விளைவிக்கும் பக்டீரியா அடங்கிய உரத்தை இலங்கைக்கு அனுப்பிய சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டுள்ளது.

குறித்த கப்பலில் உள்ள சேதனப் பசளை நிராகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் அடங்கிய அறிக்கையை சீன தூதரகத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.