இந்தியா சினிமா பிரதான செய்திகள்

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது

மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

இன்று நடைபெற்ற விழாவில், 7 பேருக்கு பத்ம விபூஷன், 10 பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் என இந்த ஆண்டு மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது இந்த விருதுகள் அறிவிக்கப்படும். 2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதன்படி பத்மபூஷன் விருதுகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

அந்தவகையில் தமிழ் மக்களின் மனம் கவர்ந்த மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள் என மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ்பிபி அ பல திரைப்படங்களில் நடிப்பிலும் அசத்தியிருப்பார்.

ரஜினியின் அனைத்து திரைப்படங்களிலும் வரும் ஓப்பனிங் பாடலை எஸ்பிபி தான் பாடியிருப்பார். இறுதியாக அண்ணாத்த திரைப்படத்தில் இவர் பாடிய அண்ணாத்த பாடலை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடியிருந்தாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அதேவேளை பிரபல பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் பாடகர் அட்னன் சமி ஆகியோருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.