உலகம் பிரதான செய்திகள்

எலிஸே மாளிகைப் படை வீரர் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு!

பிரான்ஸின் அதிபர் மாளிகையில் பணியில் இருந்த பெண் படைச் சிப்பாய் ஒருவர் தனது சக படை வீரர் ஒருவரால் தான் பாலியல்வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார் என்று முறையிட்டிருக்கிறார்.அவரது முறைப்பாடு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றுபாரிஸ் அரச சட்டவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எலிஸே மாளிகையில் கடந்த ஜூலை மாதம் நடந்ததாகக் கூறப்படுகின்ற இக்குற்றம் தொடர்பான தகவலை முதலில் “லிபரேஷன்” நாளிதழ் (Libération) வெளியிட்டிருந்தது. பணியில் இருந்து விடுபட்டுச் சென்ற இரண்டு ஜெனரல்களின் வழியனுப்பு வைபவம் ஒன்றின் போதே பெண் சிப்பாய் மீது இந்த முறைகேடு புரியப்பட்டது.

அந்த வைபவத்தில் அதிபர் எமானுவல் மக்ரோனும் கலந்து கொண்டார் என்ற தகவலை “லிபரேஷன்”வெளியிட்டிருந்தது.31 வயதான அந்தப் படைச் சிப்பாய் அரசுத் தலைவரது பாதுகாப்பு மற்றும் பணிகளில் ஈடுபடுகின்ற அலுவலர்கள் பிரிவில் ஒருவராகக் கடமையில் ஈடுபட்டிருந்தவர் என்றும், பாலியல் குற்றச்சாட்டை அடுத்து அவர் காவல்நிலையம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பிறகு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் ஊடகங்களில் தகவல் வெளி யாகி உள்ளது.முறைப்பாடு செய்த பெண் சிப்பாயும், குற்றம் புரிந்தவர் எனக் கூறப்படும் வீரரும் அதிபர் மாளிகையின் பாதுகாப்பு மற்றும் ரகசியங்களுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவரது பணிகளுக்காகநியமிக்கப்படுகின்ற பொது அலுவலர் கள் பிரிவில்(General Staff of the President of the Republic)பணிக்கு அமர்த்தப்படுபவர்கள் எலிஸே மாளிகையின் பொறுப்பின்கீழேயே அடங்குகின்றனர். அந்த வகையில் பிரஸ்தாப சிப்பாயின் குற்றச் செயல் தொடர்பில் மாளிகையின் விளக்கத்தை ஊடகங்கள் கோரியுள்ளன.

இந்த விவகாரத்தை எலிஸே மாளிகைதீவிர கவனத்தில் எடுத்துள்ளது என்றும்தேவையான சகல நடவடிக்கைகளும்உடனடியாகச் செய்யப்பட்டுள்ளன என்றும் அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் கூறியிருக்கிறார்.

அதிபர் எமானுவல் மக்ரோனின் மெய்ப்பாதுகாவலராக இருந்த அலெக்சாண்டர்பென்னலா என்பவர் 2018 இல் மே தினப்பேரணி ஒன்றில் இளம் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைத் தாக்கினார் எனக்குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தமை நினைவிருக்கலாம். அவருக்கு குற்றவியல் நீதிமன்றம் ஒன்று அண்மையில் இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறைத் தண்டனைவிதித்திருந்தது.———————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.13-11-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.