
இலங்கையில் போதைப் பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை காரணமாக, நாட்டுக்குள் தற்போது போதைப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
புலனாய்வு மற்றும் காவந்துறை உளவுப்பிரிவினரின் தகவல்களுக்கு அமைய, இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் தற்போது நாட்டில் போதைப் பொருள்களின் விலையும் பாரியளவு அதிகரித்துள்ளது என்றார்.
நாட்டின் பிரதான போதைப் பொருள் வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை காரணமாக, போதைப் பொருள் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment