பிரதான செய்திகள் விளையாட்டு

இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தினை அவுஸ்திரேலியா கைப்பற்றியது

டுபாயில் இன்று நடைபெற்ற இருபதுக்கு இருபது உலக கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்று அவுஸ்திரேலியா கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 172 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 173 எனும் வெற்றி இலக்குடன் களமிறஙிகய் அவுஸ்திரேலியஅணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது.

. இருபதுக்கு 20 உலகக்கிண்ண வரலாற்றில் அவுஸ்திரேலியா அணி முதலாவதாக கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.