உலகம் பிரதான செய்திகள்

இங்கிலாந்தின் லிவர்பூலில் கார் வெடிப்பு – மூவர் கைது!

இங்கிலாந்தின் லிவர்பூல் பெண்கள் மருத்துவமனைக்கு வெளியே ஒரு டக்ஸி வாகனம் வெடித்ததில் ஒரு பயணி பலியாகி உள்ளார்.

நேற்று (14.11.21, ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த கார் வெடிப்பு தொடர்பாக தீவிரவாத எதிர்ப்பு காவல்துறை, 29, 26 மற்றும் 21 வயதுடைய மூன்று பேரை, கென்சிங்டன் பகுதியில் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஒரு பயணி கொல்லப்பட்டதாகவும், அவர் யார் என்கிற விவரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த டக்ஸி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் வெடிப்பு தொடர்பாக மெர்செசைட் (Merseyside) காவல் துறை உடன் தீவிரவாத எதிர்ப்பு காவல்துறை இணைந்து பணியாற்றி வருவதாகவும். அதே போல இந்த விவகாரம் தொடர்பாக எம் ஐ 5 அமைப்பும் உதவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.