
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிா்த்தஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாாியான சஹ்ரான் ஹசீமுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால், நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
காத்தான்குடியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் தொடா்ந்தும் உயித்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றநிலையில் காத்தான்குடி 4ஆம் பிரிவைச்சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜவ்ராஸ் என்பவரே பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் அவரது வீட்டில் வைத்து கைது செய்து செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment