பிரதான செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது T20 போட்டியில் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இருபதுக்கு 20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் நேற்றையதினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதலாவது டஇருபதுக்கு 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுபிபனை தொிவு செய்தநிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 165 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இருபதுக்கு20 போட்டி நாளை (19) இரவு ராஞ்சியில் நடைபெறவுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.