இலங்கை பிரதான செய்திகள்

விவாத போட்டியில் மானிப்பாய் பிரதேசசபை முதலிடம்

இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை வலிகாமம் தென்மேற்கு – மானிப்பாய் பிரதேச சபையின் விவாத அணி பெற்றுக்கொண்டுள்ளது.

இரண்டாமிடத்தினை மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசசபை பெற்றதுடன் மூன்றாமிடத்தினை புதுக்குடியிருப்பு பிரதேசபை பெற்றுக்கொண்டது.

முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட மானிப்பாய் பிரதேசசபையின் விவாதகுழுவில் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் உறுப்பினர்களான அருட்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ, கந்தையா ஜெசிதன் , லோகப்பிரகாசம் ரமணன் , சிவசண்முகநாதன் அனுசன் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர். அணியின் தலைவராக உறுப்பினர் கந்தையா ஜெசிதன் செயற்பட்டிருந்தார்.

.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.