இலங்கை பிரதான செய்திகள்

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு இன்றும் பதிவு – இம்மாதத்தில் நடைபெற்ற 5வது சம்பவம்

எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் ஒன்று இன்றும் (26) பதிவாகியள்ளது. நிக்கவரெட்டிய கந்​தேகெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், இன்று காலையும் எாிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது.. இதனால், அவ்வீடு கடுமையான சேதமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நவம்பர் மாதத்திற்குள் மாத்திரம் இடம்பெற்ற ஐந்தாவது எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

கொட்டாவ – பன்னிப்பிட்டிய கல்லூரி சந்தி அருகிலுள்ள வீடோன்றில் நேற்று சிலிண்டர் வெடித்ததில் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதற்கு முன்னரும் இந்த மாதம் 3 எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.