
திருகோணமலை – ஈச்சிலம்பற்று காவல்துறைப் பிரிவிலு ள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிாிழந்த இரு சிறுவா்களினதும் உடல்கள் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடிய போது குறித்த இரண்டு சிறுவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். உயிர் தப்பிய ஏனைய சிறுவர்கள் இருவரும் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து கடலில் தேடுதல் மேற்கொண்ட போது இரு சிறுவர்களதும் உயிரிழந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தரம் 09 இல் கல்வி கற்கும் யோகேந்திர ராசா லக்சன் வயது (14), தரம் 06 இல் கல்வி கற்கும் டினேஸ்காந்த் நிம்ரோசன் வயது (12) ஆகிய மாணவர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.
Add Comment