இலங்கை பிரதான செய்திகள்

கடற்கரைபள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற ஞானசாரதேரர் தலைமையிலான குழு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று சனிக்கிழமை  (04) இரவு கல்முனை பகுதியில் அமைந்துள்ள இரு வேறு இடங்களிற்கு கடும் பாதுகாப்பிற்கு மத்தியில்  பயணம் மேற்கொண்டார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் மக்கள் கருத்தறியும் செயலமர்வுகள் கிழக்கு மாகாணம்    திருகோணமலை  மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற நிலையில் நேற்று மாலை இவர் தலைமையிலான குழுவினர் கல்முனை பகுதிகளுக்கு  சென்றிருந்தனா்

இதன்போது கல்முனை தாருஸ்ஸபா நிறுவனத்தின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற இக்குழுவினர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்முனை முஸ்லிம் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதன் போது கல்முனை வர்த்தக சங்கப்பிரதிநிதிகள் உட்பட சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் கல்முனையின் சமகாலத்தேவைகள் பற்றிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கப்பட்து.

.எனினும் அங்கு ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஞானசார தேரரை இடைமறித்து ஊடகவியலாளர்கள் அவரது பயணத்தின் நோக்கம் தொடர்பில் வினவினர்.

இதன் போது ஊடகங்கள் மக்களிடம் உண்மையான விடயங்களை அறிக்கையிட வேண்டும் எனவும் தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இதே வேளை கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவுக்கும் சென்று அதனையும் பார்வையிட்டார். இந்நிகழ்விலும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.