இலங்கை பிரதான செய்திகள்

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் பாதிப்படைந்த மேலும் ஒருவா் உயிாிழப்பு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் பாதிப்படைந்த மற்றுமொரு பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சக்கரிய்யா காலிஸா (42) என்பவரே இவ்வாறு உயிரிழந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி குறிஞ்சாக்கேணி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த குறித்த பெண் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலைக்கும் பின்னர் திருகோணமலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.