இலங்கை பிரதான செய்திகள்

வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இந்திய பிரஜையின் சாரதி அனுமதிப்பத்திரம் கரையொதுங்கியுள்ளது

இந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது. 
தமிழகத்தின் கடலூர் மாவட்டம் , ஆலம்பத்தூர் சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் (வயது 47)  என்பவரின் சாரதி அனுமதிப்பத்திரமே கரையொதுங்கிய நிலையில்  மீட்கப்பட்டுள்ளது.


இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் , யாழ்.மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி  சனிக்கிழமை வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளில் இரு சடலங்களும் , மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும், கடந்த  செவ்வாய்க்கிழமை மருதங்கேணி கடற்கரை பகுதியில் ஒரு சடலமும், கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை சாக்கோட்டை மற்றும் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியிலுமாக இதுவரை 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. குறித்த 06 சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.