இலங்கை பிரதான செய்திகள்

மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலி

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் நபா் ஒருவா் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது  வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்  மேலும் 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (05-12-2021 )  பிற்பகல் 3-30 மணியளவில்  குறித்த மர்மப்  பொருளை கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது அது வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளதுடன்   13 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


 இச்சம்பவத்தின் போது( சிவலிங்கம் யுவராஜ் வயது- 25) உயிரிழந்துள்ளதுடன் சிவலிங்கம்  நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


 இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
வெடிப்பு சம்பவம்  இடம்பெற்ற  வீட்டை சூழவுள்ள வீட்டின் சில பகுதிகளிலும் ஆபத்தான வெடிபொருட்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள மை இங்கு குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.