உலகம் பிரதான செய்திகள்

இந்தோனேசிய எரிமலை வெடிப்பில் 22போ் பலி

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீற்றா் உயரமான செமேரு எனும் எரிமலை கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியதில் 22 போ் உயிாிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்ததனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.


எரிமலையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். அதிகரிக்கும் வெப்ப காற்றால் தவித்து வரும் அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது. மேலும் படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோா் மீட்புக்குழுவினர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் தற்போது எரிமலை வெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.