Home இலங்கை கொட்டகலையில் எாிவாயுஅடுப்பு வெடிப்பு சம்பவம்

கொட்டகலையில் எாிவாயுஅடுப்பு வெடிப்பு சம்பவம்

by admin

க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் உள்ள வீடு ஒன்றில் எாிவாயுஅடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இந்த சம்பவம் இன்று(12) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். தேநீர் தயாரிப்பதற்காக  அடுப்பை பற்ற வைத்து 5 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பு வெடித்துள்ளதாக வீட்டாளர்கள் தெரிவித்தனர்.


வெடிப்பை அடுத்து எாிவாயு  அடுப்பு முழுமையாக சேதமமைந்துள்ளதுடன், அதன்பின்னர் எாிவாயு சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தாக வீட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More