
இன்றையதினம் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்ற 2021 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் அணியினை 23 ஓட்டங்களால் வென்று ஜப்னா கிங்ஸ் அணி கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது..
இதனையடுத்து 202 ஓட்டங்கள் எனும்ல் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கோல் கிளாடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டதனால் ஜப்னா கிங்ஸ் 23 ஓட்டங்களால் வெற்றி பெற்று பிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.
Spread the love
Add Comment