Home இலங்கை தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் போராட்டம்

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் போராட்டம்

by admin

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தினை முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது. 

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது, கைது செய்த படகுகளைப் விடக்கூடாது போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.  அதேவேளை போராட்டகாரர்கள் யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழி மறித்து சில மணிநேரம் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டு இருந்தது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More