
அம்பாறை திருக்கோவில் காவல் நிலையத்தில் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு காவற்துறையினர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (24.12.21) இரவு நடைபெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்துப்பாக்கிச் சூட்டினை நடத்திய காவற்துறை உத்தியோகத்தர் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் காவற்துறை சார்ஜன் ஒருவர் வீடு செல்வதற்கு காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு விடுமுறை வழங்கததால் ஆத்திரமடைந்த காவற்துறை சார்ஜன் சம்பவதினமான நேற்று (24) இரவு 11.30 மணியளவில் காவல் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது காவற்தறை சார்ஜன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட காவற்துறையினர் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 காவற்துறையினர் உயிரிழந்ததுடன் படுகாயமடைந்த காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மேலும், காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Add Comment