இலங்கை பிரதான செய்திகள்

அரியாலையில் அதிரடிபடையினர் துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்

அரியாலை நெளுக்குளம் பகுதியில் காவல்துறை விசேட அதிரடிபடையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அரியாலை முள்ளிப் பகுதியை சேர்ந்த யசிந்தன் (வயது 27) என்பவரே படுகாயமடைந்த நிலையில் , காவல்துறைக் காவலின் கீழ் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றி வந்த போது, காவல்துறை விசேட அதிரடிபடையினர் உழவு இயந்திரத்தை மறித்ததாகவும், அதன்போது உழவு இயந்திரத்தை நிறுத்தாது தப்பி சென்ற போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாண காவல்துறையினர் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மணலுடன் மீட்கப்பட்ட உழவு இயந்திரத்தையும் காவல்துறையினர் பொறுப்பெடுத்துள்ளனர்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.