
வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவனை வழி மறித்து, கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை கொள்ளையிட்டு சென்ற வழிப்பறி கொள்ளை கும்பலை காவல்துறையினா் தேடிவருகின்றனர்.
குறித்த கொள்ளை சம்பவம் சுன்னாகம் – தாவடி பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. மருதனார்மடம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவா் தொலைபேசியில் பேசியபடி அன்றைய தினம் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதன்போது அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் குறித்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை பறித்து சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சம்பவம் தொடர்பில் சுன்னாக காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
Add Comment