Home இலங்கை போதையில் கடமை – தெல்லிப்பளை காவல்துறை உத்தியோகஸ்தர் பணி இடைநீக்கம்

போதையில் கடமை – தெல்லிப்பளை காவல்துறை உத்தியோகஸ்தர் பணி இடைநீக்கம்

by admin

மதுபோதையில் கடமையில் இருந்த தெல்லிப்பழை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகஸ்த்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் நேற்றைய தினம் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டதாக , காங்கேசன்துறை உதவிக்காவல்துறை அத்தியட்சகருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட உதவிக் காவல்துறை அத்தியட்சகர் குறித்த காவல்துறை உத்தியோகத்தரை பணியிடை நீக்கம் செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடிகாமம் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மது போதையில் கடமையில் ஈடுபட்ட நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More