பிரதான செய்திகள் விளையாட்டு

தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்காவின் கப்டவுனில் நடைபெற்ற இந்தியா- தென்னாபிரிக்கா அணிகள் இடையேயான 3-வதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாபிரிக்க அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

முதல் இன்னிங்சில் இந்தியா 223 ஓட்டங்களும், தென்னாபிரிக்கா 210 ஓட்டங்களும் எடுத்திருந்தன.. இதனையடுத்து 13 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 198 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.


இதையடுத்து 212 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாபிரிக்கா அணி 4ம் நாள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்யது.

இதன்மூலம் தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி, தொடரை 2-1 என கைப்பற்றி உள்ளது. கடைசி போட்டியின் சிறந்த வீரர் மற்றும் தொடர் நாயகன் எனும் இரண்டு விருதுகளையும் கீகன் பீட்டர்சன் தட்டிச் சென்றுள்ளாா்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.