Home உலகம் சிறுவனைக் கொன்று சடலத்தை சூட்கேஸில் போட்டு வீசிய தாய்!

சிறுவனைக் கொன்று சடலத்தை சூட்கேஸில் போட்டு வீசிய தாய்!

by admin

பத்து வயதுச் சிறுவன் ஒருவனது உடல் வெட்டுக் காயங்களுடன் சூட்கேஸ் ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவனைக் கொன்று வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என நம்பப்படுகின்ற 33 வயதுடைய தாயை காவல்துறையினா் தேடிவருகின்றனர்.பாரிஸ் பிராந்தியத்தின் Ferrières-en-Brie(Seine-et-Marne) நகரில் இந்த அதிர்ச்சிச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுவனையும் மனைவியையும் காணவில்லை என்று தந்தையார் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினா் முதலில் இரத்தக் கறைகளைக் கண்டுள்ளனர். பின்னர் மோப்பநாய்களது உதவியுடன் சிறுவனது சடலம் மீட்கப்பட்டிருக்கிறது.

வீட்டில் இருந்துசுமார் நூறு மீற்றர்கள் தொலைவில் குப்பைக் கொள்கலன் ஒன்றினுள் கிடந்த சூட்கேஸினுள் சிறுவனின் சடலம் காணப்பட்டது. மகனை வீட்டில் வைத்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை மறைத்து எடுத்துவந்து வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என நம்பப்படுகிறது.

தனது உடைமைகள் எதனையும் எடுக்காமலேயே தப்பிச் சென்றுள்ள பெண்ணைத் தேடும் நடவடிக்கைகள் அப்பிரதேசம் எங்கும்முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிரஸ்தாப தம்பதிகள் ஒரே வீட்டினுள் பிரிந்து வாழ்ந்தவர்கள் என்றும் அந்த இளம் தாய் சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் விசாரணைகளில் தகவல் கிடைத்துள்ளது.

Versailles நீதித்துறை காவல்துறை பிரிவின் பிராந்திய இயக்குநரகம் (brigade of the Regional Directorate of the Judicial Police)இது தொடர்பாக விசாரணைகளை நடத்திவருகிறது.பிரான்ஸில் குடும்பப் பிணக்குகளுக்கு இடையில் குழந்தைகள் சிக்கிப்பலியாகின்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன

.——————————————————————

குமாரதாஸன். 27-01-2022பாரிஸ்

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.