பிரதான செய்திகள் விளையாட்டு

9வது முறையாக கிண்ணத்தினைக் கைப்பற்றிய சீனா

நவிமும்பையில் நேற்று நடைபெற்ற 20-வது பெண்களுக்கான ஆசிய கால்பந்து போட்டியில் சீனா 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வென்று 9வது முறையாக கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.

விறுவிறுப்பான நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் தென்கொரியா 2 கோல்கள் அடிக்க, பிற்பாதியில் சீனா 68 மற்றும் 72-வது நிமிடங்களில் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. இதனையடுத்து வெற்றிக்குரிய கோலை அடிக்க இரு அணியினரும் போட்டி போட் நிலையில் கடைசி நிமிடத்தில் சீனாவின் ஸியாவ் யுஸ் கோல் போட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இதன்மூலம் சீனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 9வது முறையாக கிண்ணத்தினைக் கைப்பற்றியது. சீனா கடைசியாக 2006-ம் ஆண்டில் இந்த கிண்ணத்தினைக் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.