இலங்கை பிரதான செய்திகள்

இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.