இலங்கை பிரதான செய்திகள்

மிகை கட்டண வரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது! விசேட மனு தாக்கலானது!

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிகை கட்டண வரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்மானித்து உத்தரவிடுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2020 ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் மதிப்பீட்டாண்டில் 2,000 ரூபாவிற்கும் அதிக வரியை அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபரொருவர் கூட்டு வர்த்தகம் மற்றும் நிறுவனங்களின் வருமானத்தில் 25 வீதத்தை மிகை கட்டண வரியை செலுத்த வேண்டும் என இந்த சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விசேட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விசேட வரி சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளுக்கு மேலதிகமாக, பொதுமக்கள் அபிப்பிராயத்தை பெறுதல் அவசியம் என உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிய நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.