இலங்கை பிரதான செய்திகள்

பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 9.30 மணியளவில் ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் மகிந்த ராஜபக்ஸவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய்,
காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும்,
இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் காவல்துறையினரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.