இலங்கை பிரதான செய்திகள்

புதுக்குடியிருப்பில் வானில் மாணவன் கடத்தல்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற வள்ளிபுனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவா்  வானில் கடத்தி செல்லப்பட்ட நிலையில், கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

இவரைக் கடத்தி சென்ற வானுக்குள் மேலும் இரு சிறுவர்கள் கை,கால்,கட்டப்பட்டு வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவனை காட்டுப்ப்பகுதி ஒன்றுக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது  அவா் வானில் இருந்து தப்பி ஓடிய நிலையில் உறவினா்கள் அவரை அடிகாயங்களுடன் மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.